வெளிநாட்டுச் செய்திகள்

தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் காலமானார்

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோனின் மூத்த மகளான பஜ்ரகிதியாபா நரேந்திரா தெபியாவதி இளவரசி காலமானதாக அந்நாட்டு அரண்மனை இன்று (12) அறிவித்துள்ளது.

சுமார் 4 ஆண்டுகள் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழக்கும் போது அவருக்கு வயது 47 ஆகும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, அவர் நினைவிழந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button