உள்நாட்டு செய்திகள்
எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அவரது தாய் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
“எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள். நாட்டுக்காகவே அவரை நான் ஒப்படைத்தேன். ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக அவரை பலிகொடுக்க என்னால் முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இனி எந்தத் தாய்மாரும் தங்களது பிள்ளைகளை இராணுவ சேவைக்காக அர்ப்பணிக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் தன்னைப் போலவே போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




