விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன், அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 முதல் 2026 வரையான காலப்பகுதியில் 378 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன், 48 சதங்கள் மற்றும் 6 இரட்டைச் சதங்கள் உட்பட மொத்தம் 19,346 ஓட்டங்களைக் குவித்து, நியூசிலாந்து வரலாற்றில் அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக ஓய்வு பெறுகிறார்.

அதேபோல், நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான இவர், 110 போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உட்பட 54.06 என்ற சராசரியுடன் 9,515 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மூன்று வடிவ போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை வழிநடத்திய வில்லியம்சன், அவரது தலைமையின் கீழ் 2019 உலகக்கிண்ணம் மற்றும் 2021 டி20 உலகக்கிண்ணத் தொடர்களின் இறுதிப்போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றார்.

மேலும், 2021 இல் நடைபெற்ற முதலாவது உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) பட்டத்தை நியூசிலாந்து அணி வென்ற போது அவரே அணியை வழிநடத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button