உள்நாட்டு செய்திகள்
இலங்கைக்குள் ஊடுருவக்கூடுமா எபோலா வைரஸ்?

எபோலா வைரஸ் பரவல் தொடர்பான அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.
எபோலா வைரஸின் தற்போதைய நிலைவரம் குறித்து இன்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு இணங்க, சுகாதார அமைச்சு தற்போது தேவையான ஆயத்தத் திட்டங்களையும் மற்றும் அதற்கான ஒத்திகைகளையும் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.




