உள்நாட்டு செய்திகள்
ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பின்னரே கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.




