காற்றின் தரம் குறைந்துபோய் உள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துபோய் உள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, அறிக்கையொன்றின் மூலமே குறித்த பதிவினை தெரிவித்துள்ளனர் !
நாட்டில் பெரும்பாலான நகரங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் வளியின் தரச் சுட்டெண் (AQI) மிதமான அளவில் இருந்தது. அதேவேளை, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது. அடுத்த 24 மணித்தியாலங்களில் வளியின் தரச் சுட்டெண் 56-134 க்கு இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவைக் குறிக்கிறது, அதேவேளை யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும். முடிந்தவரை முகமூடிகளை அணியவும், உணர்திறன் மிக்கவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை சந்தித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது !




