உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் இறந்தது ஒரு சட்டத்தரணி !

இன்று (13) மாலை அக்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் கார்
நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சம்பவத்தின் போது ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
வாகனத்திற்குள் இருந்ததாகவும், அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும்
அறிவிக்கப்பட்டது.

அவர்கள் யார் என அடையாளம் காணமுடியாத நிலையில், கொல்லப்பட்ட
இருவரில் ஒருவர் வழக்கறிஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அவரின் பெயர்
புத்திக மல்லவராச்சி என்பதாகும்.

குறித்த சட்டத்தரணி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முதன்மையாக
சட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக அவரது தொழில்முறை பின்னணியை
நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button