உள்நாட்டு செய்திகள்

வாகன இறக்குமதியால் சுங்க வருமானம் தொடர்ந்து அதிகரிப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாகன இறக்குமதிக்கு மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தனா புஞ்சிஹேவா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து நாட்டுக்குள் வருவதாகவும், சந்தையில் விற்பனையாகாமல் பல வாகனங்கள் தேங்கியிருந்தாலும் இறக்குமதியில் எதிர்பார்த்தளவு குறைவு பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சுங்க வருவாயில் வாகன இறக்குமதிகள் சுமார் 30 சதவீத பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்ட அவர், ஜனவரி முதல் மே மாதம் வரை பெறப்பட்ட வருமானத் தரவுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன எனவும் மேலதிக கட்டணங்கள் விதிக்கப்பட்ட பின்னரும் அரசின் வருமானத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button