உள்நாட்டு செய்திகள்
வடக்கு மீனவர்களின்உரிமைகளை இழப்பதற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி

வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி அவர்கள் உறுதியாகத் தெரிவித்தார், நேற்று மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்,
நேற்று மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் வட மாகாண ஆளுனர் நா.வேதநாயகன், பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன், வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலர்களும் இணைந்திருந்தனர்,
மேலும் அனர்த்த நிலமைகளின் போது மக்களுக்காக சேவை செய்த அலுவலர்களை பாராட்டிய ஜனாதிபதி, வீதிகள், தண்ணீர், மின்சாரம் மற்றும் வடிகாலமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார் !



