உள்நாட்டு செய்திகள்
மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் விபத்து

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31ஆம் சந்தி பகுதியில் இன்று (29) மதியம் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 26 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலை மற்றும் கொட்டியாகல ஆகிய பகுதிகளுக்கு இடையே பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.




