உள்நாட்டு செய்திகள்
சூறாவளி எதிரொலி, வடக்கு ரயில் பாதைகள் மூடப்படுகின்றது .

டிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று (19) ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு – தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கவும் ஒழுங்கு செய்திருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.




