விளையாட்டுச் செய்திகள்
இங்கிலாந்தே எதிர்பார்க்காத வெற்றி, இலங்கை படுதோல்வி

ICC T20 World Cup 2026 இன் 42 ஆவது போட்டி இலங்கை மற்றும் இங்கிலாந்து
அணிகளுக்கு எதிராக கண்டியில் இடம்பெற்றது இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற
இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில்
09 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு 147 ஓட்டங்களை
வெற்றி இலக்காக நிர்ணயித்தது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
16.4 ஓவர்கள் நிறைவில் சகல விகெ்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே
பெற்று படுதோல்வியடைந்தது.




