இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க, 103 பந்துகளுக்கு முகம் கொடுத்து 79 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனது 19ஆவது ஒருநாள் அரைச்சதத்தையும் பூர்த்தி செய்தார்.
பின்னர், 304 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.




