உள்நாட்டு செய்திகள்
கபில சந்திரசேனவின் மரண விசாரணை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான மேலதிக மரண விசாரணை சாட்சியங்களை, எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான 19, 20 மற்றும் 23ஆம் இலக்க சாட்சிகளான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, சட்டத்தரணி உதார முஹந்திரம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் குமாரசிறி பண்டார ஆகியோர் இன்று (05) நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.




