உள்நாட்டு செய்திகள்
வீதியை கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகடவர சந்திப் பகுதியில், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்றில், வீதியை கடக்க முயன்ற பெண் பாதசாரி ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.
இன்று (10) அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் படுகாயமடைந்த அப்பெண், மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் கணேதென்ன, ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார்.
கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




