உள்நாட்டு செய்திகள்

கம்பஹா, மஹர பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்ழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக, கம்பஹா மற்றும் மஹர பிரதேசத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் இன்று (11) பி.ப. 7.00 மணி முதல் நாளை (12) காலை 7.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீர் விநியோகத் தடை அமுலாகும் பகுதிகள் பின்வருமாறு:

  • மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

எல்தெனிய, கோனஹேன, வேபெட, சூரியபாலுவ மற்றும் உடுபிட.

  • கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:

பரகந்தெனிய, கொஸ்ஸின்ன, எபரலுவ, இம்புல்கொட மற்றும் யாகொட.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button