உள்நாட்டு செய்திகள்
இன்றைய காலநிலை பற்றிய தகவல்கள் !

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது, அதுபோன்று நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.




