உள்நாட்டு செய்திகள்
ஆண்டின் ஆரம்பத்தில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் !

அதிகரித்து வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகையின் அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஒரு நாள் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாளாக ஜனவரி 15 பதிவாகியுள்ளது, அதனடிப்படையில் அன்றைய தினம் 10,483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 25 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளனர், அதன்படி இந்தியாவில் இருந்து 41,603 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 22,876 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேர் மற்றும் ஜெர்மனியிலிருந்து 14,431 பேர் நாட்டிற்கு வந்துள்ளனர்.



