உள்நாட்டு செய்திகள்

சிறுமி துஸ்பிரயோகம் செய்தவருக்கு 30 வருட கடூழிய சிறை !

மனைவியின் சகோதரியான குறித்த  14 வயது சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

2020 தொடக்கம் 2021 வரை குறித்த சிறுமி 3 தடவைகள் வரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன் சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தை ஒன்றினையும் பிரசவித்துள்ளார், 27 வயதுடைய குறித்த குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button