உள்நாட்டு செய்திகள்
லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு !

நேற்று(06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்தின்படி, 4,250 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின்
புதிய விலை 4,330 ரூபாவாகும், அதேபோன்று 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால்
அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாகும் எனவும் அந் நிறுவனம் அறிவித்துள்ளது.




