உள்நாட்டு செய்திகள்
கிரிக்கட் துடுப்பினால் அடித்ததில் இளைஞர் மரணம் !

இரு குடும்பங்களிற்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர்
கிரிக்கெட் துடுப்பினால் அடித்ததில் உயிரிழந்துள்ளார், இச் சம்பவம் இரத்மலாணை பகுதியில் பதிவாகியுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்,
இச் சம்பவம் தொடர்பில் இது வரையில் ஒரு பெண் உட்பட ஆறு பேர் இன்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




