நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழைவீழ்ச்சி பதிவாகும் !

இன்றைய (09) காலநிலைத் தரவுகளின் அடிப்படையில் காலி, மாத்தறை, களுத்துறை
மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ
அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்
சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று
மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.




