உள்நாட்டு செய்திகள்
நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயம்

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு கோட்டை பகுதியில் ‘க்ரிஷ்’ சதுக்கத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை அடிப்படையாகக் கொண்டு, முறைகேடான முறையில் நிதி கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




