உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவில் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு கிலோகிராமிற்கும் அதிகமான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இன்று (30) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

4 கிலோகிராம் 104 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் விமான நிலைய வருகைப் பகுதியில் வைத்து ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மற்றும் கல்கிசைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button