உள்நாட்டு செய்திகள்

2025 ஆம் ஆண்டில் இலங்கை சுங்கம் சாதனை !

இலங்கை சுங்கத் திணைக்களம், நிதிஅமைச்சின் வருமான இலக்கினை விட அதிகமான இலக்கினை எட்டி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தினைப் பெற்றே குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார், 2025 ஆண்டிற்கு  2,115 பில்லியன் ரூபாயை இலக்காக நிர்ணயித்திருந்தது, ஆனாலும் குறித்த இலக்கினை 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திலேயே கடந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டமை இந்த அதிரடி வருமான உயர்விற்கு முதன்மைக் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button