உள்நாட்டு செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பொறிக்குள் அரசாங்கம் மக்களைத் தள்ளுகிறது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வரும் நிலையிலும், உள்நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களைக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும், தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான வைத்தியர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் உலக யுத்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை மேலாண்மை செய்து, மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க முந்தைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போதைய சூழலில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் படிப்படியாகக் குறைந்து வரும் போதிலும், இலங்கையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் நேரடித் தாக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்து, சாதாரண குடும்பங்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button