Uncategorized

துயரத்திலும் நன்மை செய்த வவுனியா இளைஞன் !

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கிரன் என்பவர் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால் தலையில் பலத்த காயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேலதிக சிகீச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர்   அதிதீவிர சிகீச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார் , அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவக்குழுவினரால் சிகீச்சைகள்
வழங்கப்பட்ட போதிலும் மூளைச்சாவு அடைந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது ,

இந்த துயரச் செய்தி அவரது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது,
இந்த இக்கட்டான நிலையிலும் அவர்களின் குடும்பத்தினர் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர். அதனடிப்படையில்
அவரது சிறுநீரகங்கள் அறுவைச்சிகீச்சை மூலம் இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.
இக்கட்டான சூழ்நிலையில் குறித்த குடும்பத்தினரின் மனிதாபிமான செயற்பாட்டினால்
இருவரின் வாழ்வு மீண்டும் உயிர்பெற்றமையும், அந்த மனிதாபிமான எண்ணமும், யாழ்.போதனா வைத்தியசாலை சமூகத்தினரால் வெகுவாக பாராட்டப்பட்டது !

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button