இந்தியா – அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் எப்போது?

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் கையொப்பமாகக்கூடும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் சொ்ஜியோ கோா் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவும், அமெரிக்காவும் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்த ஷரத்துகள், இந்திய நலன்களுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு சாதமாகவும் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் கோா், இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவித்தாா். அப்போது அவா், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடப்பதாகவும், அந்த ஒப்பந்தம் அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் கையொப்பமாகக்கூடும் என்றும் குறிப்பிட்டாா்.




