வெளிநாட்டுச் செய்திகள்

மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று (04) 3.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியன்மாரில் இன்று அதிகாலை 7.10 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 126 கிலோமீற்றர் ஆழத்தில் 4.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஆழமற்ற நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக ஆபத்தானவை. ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பிற்கு குறைந்த தூரமே பயணிக்கும். இதன் விளைவாக, தரை அதிர்வு அதிகமாகவும், கட்டமைப்பு சேதங்கள் அதிகமாகவும், உயிரிழப்புகள் அதிகமாகவும் ஏற்படுகின்றன.

மியான்மர் அதன் நீண்ட கடற்கரையோரம் மிதமான மற்றும் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகளால் ஏற்படும் அபாயங்களுக்கு ஆளாகக்கூடியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button