உள்நாட்டு செய்திகள்

சுரேஷ் சலேவின் மனு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நாளை (04) காரணிகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேகநபராக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button