உள்நாட்டு செய்திகள்
மீகொட கோர விபத்து: தேடப்பட்ட இருவர் பொலிஸில் சரண்

மீகொட பகுதியில் தன்சல் வரிசையில் இருந்தவர்கள் மீது வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில், அங்கிருந்து தப்பியோடிய கெப் ரக வாகனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று (6) காலை சட்டத்தரணி ஒருவர் ஊடாக மீகொட பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.




