உள்நாட்டு செய்திகள்
ஹொரணையில் முதியோர் இல்லம் ஒன்றில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த பலர் கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




