உள்நாட்டு செய்திகள்
ஹொரணை வங்கி கொள்ளைச் சம்பவம் – இருவர் கைது

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் மூன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, குறித்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.




