உள்நாட்டு செய்திகள்

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த “Landing Ship Tank” வகைக்குரிய ‘INS AIRAVAT ’ என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் IP Patil கடமையாற்றுகின்றார்.

மேலும், கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பலான ‘INS AIRAVAT’ நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் இலங்கைக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button