உள்நாட்டு செய்திகள்

நாட்டில் அரிசி தட்டுப்பாட்டுக்கு இடமில்லை

எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேவையான அளவு மாற்று அரிசி இருப்புகளை பேண இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர் காரணமாக நாட்டில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

போர் மோதல்கள் தொடர்ந்தாலும், ஏற்றுமதி வருமானம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி நாட்டிற்கு சாதக தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் டொலரின் மதிப்பு உயர்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு தற்போதைய அரசாங்கம் மேலும் இடமளிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button