உள்நாட்டு செய்திகள்

கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

கிராண்ட்பாஸ், லூகாஸ் வீதி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொட்டலங்க சந்தி திசையில் இருந்து பேலியகொடை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, பிரைம்மூவர் ரக லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பிரைம்மூவர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button