உள்நாட்டு செய்திகள்
எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை ? – அமைச்சர் !

சரியான முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கத் தவறினால்,லாஃப் நிறுவனத்திற்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு
அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார், அதேவேளை மூன்று இலட்சம் லிட்ரோ
எரிவாயு கொள்கலன்களை இன்று (23) சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
எரிவாயு தட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சிங்களப்பத்திரிகை ஒன்றுக்கு பதிலளித்த போதே
அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார், இன்று முதல் எரிவாயு தொடர்பான சிக்கல்கள் நிறைவிற்கு
வரும் எனவும் அவது மேலும் குறிப்பிட்டார்.



