உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மழை நிலை குறைவடையும் வாய்ப்பு !

தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (23) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது, இன்றையதினம் (23) நாட்டின் வடக்கு,
வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை
பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில்
பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, அம்பாந்தோட்டை
மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும்
சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button