உள்நாட்டு செய்திகள்

எஹலியகொட பொலிஸ் நிலைய OIC கைது

எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இரத்தினபுரி பிரிவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணிக்கக்கல் ஒன்று திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாடொன்றின் விசாரணையினை தவிர்த்த குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான பணத்தை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டு விசாரணை நடவடிக்கைகளை அவர் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட இருவரால் எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையக் கிடைத்த உத்தரவின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button