உள்நாட்டு செய்திகள்
எரிவாயு தட்டுப்பாடு, நிறுவனத்தினரின் விசேட அறிவிப்பு !

லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்கள் தட்டுப்பாடு குறித்து, அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிவாயு இறக்குமதி
முனையத்தை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டு கட்டுப்பாடு காரணமாகவே இந்தத் தற்காலிக
விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
இடைக்கால நடவடிக்கைக்காக உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சர்வதேச
விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் எரிவாயு கப்பல்களை நேரடியாக கொழும்பு துறைமுகத்துக்கு
திசைதிருப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எரிவாயு கையிருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
சந்தைக்குத் தடையின்றி எரிவாயுவை விநியோகிப்பதற்கான பொறிமுறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.
ஆகவே பொதுமக்கள் எதுவித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென நிறுவனம் உறுதியளித்துள்ளது.




