உள்நாட்டு செய்திகள்
இலங்கையின் டித்வா புயல் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை !

இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான
அலுவலகம் கண்காணிப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது இந்த அறிக்கையில் கடந்த
20 வருடத்திற்குள் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் இதுவே மிகப் பாரிய அழிவுகளை
ஏற்படுத்தியது எனவும் இது 25 மாவட்டங்களிலும் 2.2 மில்லியன் மக்களைப்
பாதித்துள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.
மேலும் இதனால் 646 உயிர்கள் பறிபோனது மற்றும் 173 பேர் வரையில்
காணமல் போனார்கள், அது போன்று 165,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும்
இடம்பெயர்ந்துள்ளனர், பலர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்,
இன்னும் பலர் முகாம்களிலும் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்
எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




