உள்நாட்டு செய்திகள்
வாகனத்துக்குள் இருந்த ஆண்–பெண் சுட்டுக்கொலை

தலங்கம–அகுரேகொட பகுதியில் இரண்டு பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகுரேகொடாவில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டின் கார் நிறுத்துமிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடைபெறும் போது, உயிரிழந்தவர்கள் ஒரு வாகனத்தின் உள்ளே இருந்ததாகவும், துப்பாக்கி காயங்களால் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் T56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் ஒருவர் ஆண் மற்றும் ஒருவர் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் அடையாளம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவத்திற்கான காரணத்தையும், இதில் தொடர்புடையவர்களையும் கண்டறிய தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




