உள்நாட்டு செய்திகள்

‘LankaKonect’ செயலி நாளை அறிமுகம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் முறைப்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான புதிய தளமான ‘LankaKonect’ என்ற கைபேசி செயலி (Mobile Application) நாளை (16) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அணுகக்கூடிய, பதிலளிக்கக்கூடிய மற்றும் மக்களுக்கு உகந்த தூதரக சேவைகளை நோக்கிய ஒரு படியாக இந்த புதிய முயற்சி அமையும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர விவரித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை கையாள்வதை முறைப்படுத்துவதற்கும், தூதரக சேவைகளில் விரைவான பதிலளிப்பு மற்றும் மேம்பட்ட வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்கும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button