உள்நாட்டு செய்திகள்

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு – பல பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்மட்டம் அதிகரித்தாலும், இதுவரை வெள்ள அபாய நிலை ஏற்படவில்லை என, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆறுகள் முகாமைத்துவப் பிரிவின் பிரதம பொறியியலாளர் எஸ்.ஏ பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நீர் மட்டம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் அடுத்து வரும் மழைவீழ்ச்சியின் போது நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கம்பஹா, அத்தனகல, வத்தளை, மினுவாங்கொடை மற்றும் மீரிகம போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கெட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை தொடருமானால் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் 60 மில்லி மீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீரேந்து பிரதேசங்களுக்கு உட்பட்ட கொழும்பு , கேகாலை இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 25 – 50 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நில்வலா கங்கை, கிங்கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மஹா ஓயா ஆற்றுப்படுக்கைகளின் பெரும்பாலான பகுதிகளில் குறைவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆறுகள் முகாமைத்துவப் பிரிவின் பிரதம பொறியியலாளர் எஸ்.ஏ பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button