வெளிநாட்டுச் செய்திகள்
விண்வெளி நிலையத்தில் அவசரநிலை: நாசா விடுத்த உத்தரவு

சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) ரஷ்யப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று கசிவு (Air Leak) மேலும் மோசமடைந்துள்ளதை அடுத்து, அங்குள்ள விண்வெளி வீரர்களை உடனடியாக தங்களின் விண்கலங்களுக்குள் தஞ்சம் புகுமாறு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவசரநிலை ஏற்பட்டால் விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கும் (Evacuation) தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




