உள்நாட்டு செய்திகள்
தங்கத்தின் விலையில் இன்றும் மாற்றம்

இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
- 24 கரட் தங்கம் – 384,000 ரூபாய் (ஒரு பவுண்)
- 22 கரட் தங்கம் – 353,400 ரூபாய் (ஒரு பவுண்)
- 24 கரட் தங்கம் – 48,000 ரூபாய் (ஒரு கிராம்)
- 22 கரட் தங்கம் – 44,175 ரூபாய் (ஒரு கிராம்)




