உள்நாட்டு செய்திகள்
இன்று முதல் மழை அதிகரிக்கலாம் !

டித்வா புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கையில் பல உயிரிழப்புகள் உள்ளிட்ட பல உடமைகளும் சேதமடைந்துள்ளது, அதனடிப்படையில் மீண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கொடையாளர்களின் உதவியுடன் நாடு மீண்டு வரும் வேளையில் நாட்டின் காலநிலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமையிலிருந்து வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டில் ஏனைய பிரதேசங்களிலும் மழைபெய்வதற்கான சாத்தியம் உள்ளது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது !


