உள்நாட்டு செய்திகள்
அதிகமான பாடசாலைகளில் 10 க்கும் குறைவான ஆசிரியர்கள் பணியில் !

நாட்டில் இடம்பெற்ற தொகைமதிப்பின் படி, நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் 3,065 பாடசாலைகளில் 10-க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாகவும் அத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.




