உள்நாட்டு செய்திகள்

நாட்டிற்குள் வந்த போதைப்பொருட்கள், இருவர் கைது !

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து, கடந்த பெப்ரவரி 2 ஆம் தேதி வத்தளையில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையில் இரண்டு சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டதுடன் நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 744,500 மருந்து காப்ஸ்யூல்களும் பறிமுதல் செய்யப்பட்டன,

மேலும் கைதான குறித்த இருவரும் 28 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கல்பிட்டி மற்றும் கோபேகனேவைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களும், போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button