ஜனாதிபதி நிதியத்திற்கு மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு !

கடந்த 2025 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு
பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள்
மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59% இனால் அதிகரித்துள்ளது என
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 விண்ணப்பங்கள்
கிடைத்துள்ளன, அது போன்று 2024 ஆம் ஆண்டில் 3,313 விண்ணப்பங்களும்,
2023 ஆம் ஆண்டில் 3,456 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன. அதன்படி கடந்த
ஆண்டில் மேலதிகமாக 1,964 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன,
அதில் 70% க்கும் அதிகமானோருக்கு இதுவரையில் மருத்துவ உதவிகள் வழங்கி
முடிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இத்திட்டம் மிகவும்
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின்
ஏனைய சேவைகளையும் பரவலாக்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




